ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சிம்ரன்
டூரிஸ்டர் ஃபேமிலி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை சிம்ரன். நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்டர் ஃபேமிலி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் நடித்த நடிகை சிம்ரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகை சிம்ரன், அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர் ஆகியோர் ரசிகர்களை சந்தித்தனர். திரைப்படத்தை வெகுவாக பாராட்டிய ரசிகர்கள் சிம்ரனை பார்த்து உற்சாகமடைந்தனர்.
Next Story
