தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும் - திரைப்பிரபலங்களுக்கு பூச்சி முருகன் கோரிக்கை

ஊரடங்கால் தொழில் இழந்திருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன்வரவேண்டும் என நடிகர் பூச்சி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும் - திரைப்பிரபலங்களுக்கு பூச்சி முருகன் கோரிக்கை
Published on

ஊரடங்கால் தொழில் இழந்திருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன்வரவேண்டும் என நடிகர் பூச்சி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திரைப்படத் தொழிலாளர் நல சங்கமான பெப்சிக்கு பிரபல நடிகர்கள் உதவி செய்தாலும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி சென்றடையவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தனி அதிகாரி உத்தரவு பிறப்பித்ததன் பேரில் உதவி வழங்குவதற்காக தனி வங்கிக்கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், திரைப்பிரபலங்கள் பெப்சிக்கு வழங்குவதைப் போன்று நடிகர் சங்கத்திற்கும் உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com