குழந்தையின் சிகிச்சைக்காக நடிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
குழந்தையின் சிகிச்சைக்கு நிதி திரட்டி வழங்கிய நடிகர்கள்
ஒன்பது மாத குழந்தையின் முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்க நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நிதி திரட்டினர். குழந்தையின் மருத்துவ செலவுக்கு தேவைப்படும் 16 கோடி ரூபாயை திரட்டுவதற்கான நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதியை அறக்கட்டளையினர் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கினர்.
Next Story
