நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் - வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் - வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்
Published on
பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் 8க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பிகில் படம் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனை யின்போது நடிகர் விஜய் வீட்டில் சில ஆவணங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சீலை அதிகாரிகள் நீக்கி ஆவணங்கள் தொடர்பாக, விஜய்யின் நிர்வாகிகளிடம் விசாரித்தனர். அப்போது மாஸ்டர் படத்தில் பெற்ற சம்பளம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதில் பிகில் படத்திற்கு நடிகர் விஜய் 50 கோடி ரூபாய் சம்பளமும், மாஸ்டர் திரைப்படத்திற்கு 80 கோடி ரூபாயையும் சம்பளமாக பெற்றது தெரியவந்தது. இதற்கான வரியை விஜய் சரியாக செலுத்தியது தெரியவந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் புறப்பட்டு சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com