CANDERE ஜுவல்லர்ஸின் விளம்பரத் தூதராக நடிகர் ஷாருக்கான் நியமனம்

x

கல்யாண் ஜுவல்லர்ஸ் குழுமத்தை சேர்ந்த, கேண்டரே CANDERE ஜுவல்லர்ஸ், பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விளம்பரத் துாதராக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், CANDERE நிறுவனத்தின் டிஜிட்டல், தொலைக்காட்சி, விற்பனை மைய விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்திலும் நடிகர் ஷாருக்கான் முக்கிய பங்காற்றுவார் என்று தெரிவித்துள்ளது. இந்த CANDERE பிராண்டின் கீழ், நாடு முழுதும் 75க்கும் அதிகமான, நகைக்கடைகள் இயங்கி வரும் நிலையில், நகைகளின் விலை, 10,000 ரூபாய் முதல் துவங்கும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. விளம்பர துாதராக நியமிக்கப்பட்டது குறித்து ஷாருக் கான் பேசும்போது, கல்யாண் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் கேண்டரே பிராண்டுடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்