காண்ட்ராக்டரை தாக்கியதாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் சந்தானம்

கட்டிட ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் ஆஜராக பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
x

காண்ட்ராக்டரை தாக்கியதாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் சந்தானம்

கட்டிட ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் ஆஜராக பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சண்முகசுந்தரம் என்ற ஒப்பந்ததாரருக்கும், நடிகர் சந்தானத்துக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் சந்தானம் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சந்தானம் மீண்டும் ஆகஸ்ட் 4ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்