Actor Krishna | Drug addiction | போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்

x

நடிகர் கிருஷ்ணாவுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் மெத்தபிட்டமைன் போதைப் பொருள் சப்ளை செய்ததாக அம்பத்தூர் சேர்ந்த தீபக் ராஜ், ஆண்டனி ரூபன் ஆகிய இருவரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக, இமானுவேல் ரோகன் என்பவரையும் தற்போது கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கெவினுக்கு பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய நபராக

இருந்ததாகவும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழங்கிய குழுவுடன் இவரும் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்