Actor karthi || பள்ளி கட்டணம் செலுத்த முடியாததை நினைவு கூர்ந்து கண்கலங்கிய கார்த்தி
நடிகர் கார்த்தி தனது அத்தை இளமைக் காலத்தில் பள்ளிக்குச் செல்லவும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் சிரமப்பட்ட சூழலை நினைவுகூர்ந்து மேடையில் கண்ணீர் மல்க பேசினார். கோவை, சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சிவக்குமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.தொடர்ந்து மேடையில் பேசிய தொடர்ந்து மேடையில் நடிகர் கார்த்தி தனது தந்தை பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார். கார்த்தி கண்ணீர் விட்டுக் கலங்கியதைக் கண்ட சிவக்குமார், அவரை கட்டியணைத்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
Next Story
