மீறிய நடிகர் கனல் கண்ணன் - ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்

x

சென்னையில் போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை எடுத்துச் சென்ற 53 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவல்லிகேணி ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் விநாயகர் ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்து இருந்தனர். போலீசாரின் தடையையும் மீறி இந்து முன்னணி அமைப்பினர் கையில் விநாயகர் சிலை ஏந்தி அனுமதி மறுக்கப்பட்ட இடம் வழியாக செல்ல முற்பட்டனர். இதனையடுத்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மனோகரன், நடிகர் கனல் கண்ணன் உள்ளிட்ட 53 இந்து முன்னணியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்