விஜயகாந்த் நினைவிடத்தில் தீபாராதனை எடுத்து, விழுந்து வணங்கிய நடிகர் ஜெயம் ரவி | Vijayakanth

விஜயகாந்த் நினைவிடத்தில் தீபாராதனை எடுத்து, விழுந்து வணங்கிய நடிகர் ஜெயம் ரவி | Vijayakanth
Published on

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் கௌதம் கார்த்தி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்த்து, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில், திருநங்கைகள் உட்பட ஏராளமானோர் சென்று, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். இதே போன்று, ரவீந்திரநாத் எம்.பி., நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது எனக்கும் சந்தோசம் தான் அதுதான் நியாயமான ஒன்று என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற ஜெயம் ரவி, உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் செய்த‌தைப் போன்று நடிகர் சங்கத்தில் தொடர்ந்து செய்வது என உறுதி ஏற்பதாக கூறினார். புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் கட்ட‌டத்திற்கு விஜயகாந்தின் பெயர் சூட்டுவது குறித்து, சங்க உறுப்பினர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்

X

Thanthi TV
www.thanthitv.com