நடனமாடி கொண்டிருக்கும் போதே `காந்தாரா’-2 பட நடிகர் மரணம்
காந்தாரா -2 படத்தில் நடித்து வந்த நடிகர் ராகேஷ் பூஜாரி, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் நிட்டே கிராமத்தில் நடைபெற்ற நண்பனின் திருமண விழாவில் நடிகர் ராகேஷ் பூஜாரி பங்கேற்றிருந்தார். மெஹந்தி நிகழ்ச்சியின் போது நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த ராகேஷ் பூஜாரி, திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் ராகேஷ் பூஜாரி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
