சப் கலெக்டராக பதவியேற்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன் நெகிழ்ச்சி

சப் கலெக்டராக பதவியேற்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன் நெகிழ்ச்சி

திருப்பூர் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன், திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றார்.

அவருக்கு சார் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்ற பின்னர் பேசிய அவர், மூத்த அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்களுடன் இணைந்து தனது முழு உழைப்பையும் திருப்பூருக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும் திரைத்துறையை சேர்ந்த குடும்பம் என்றாலும் தனது பெற்றோர் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததால் தான் இந்த நிலையை அடைய முடிந்தது என்று கூறி அவர்களுக்கு நன்றி தெரவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com