உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பரவை முனியம்மாவிற்கு நடிகர் அபி சரவணன் உதவி

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நாட்டு புற பாடகி பரவை முனியம்மாவை நடிகர் அபி சரவணன் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பரவை முனியம்மாவிற்கு நடிகர் அபி சரவணன் உதவி
Published on

முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தும் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர் பரவை முனியம்மா. வயது முதிர்வு காரணமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் மதுரை பரவை பகுதியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு திணறலால் அவதிப்பட்டதை அறிந்த நடிகர் அபி சரவணன் நேரில் சென்று பரவை முனியம்மாவை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com