மதுபோதையில் ஆயுதப்படை போலீசார் செய்த செயல் - திருப்பதியில் அதிர்ச்சி

x

திருப்பதி திருமலையில் மது போதையில் போலீஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று ஆயுதப்படை போலீசார் தடுப்பு சுவரில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வாகனம் சேதமடைந்ததுடன்

ஒரு டயர் பஞ்சரானது.சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை பிடிக்க சென்ற போது ஒருவர் தப்பியோடிய நிலையில், இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் மது,புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை பயன்படுத்த தடை அமலில் உள்ள நிலையில் போலீசாரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்