பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சென்னை நபர் செய்த பகீர் செயல் - பின்னணியில் 7 குழந்தைகள், கருவில் சிசு

பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சென்னை நபர் செய்த பகீர் செயல் - பின்னணியில் 7 குழந்தைகள், கருவில் சிசு

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்துவிட்டு, பணம் தருவதாக கூறி ஊழியர்களை அழைத்து சென்று, நூதன முறையில் செல்போன்களை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்...சென்னை ராமாபுரம் முல்லை நகர் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் என பிடித்ததை ஆர்டர் செய்த நபர், பணத்தை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்ததாகவும், ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். அதனை நம்பி உணவக உரிமையாளர், கடை ஊழியரை அனுப்பி வைத்த நிலையில், ஊழியரின் செல்போனை வாங்கிய அந்த நபர் போனில் பேசியபடி தப்பியோடியுள்ளார். இது தொடர்பான புகாரில் கொடுங்கையூர் நசீர் கான் என்பவரை கைது செய்த போலீசார், அவர் இதே பாணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியதை கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கு ஆறு பெண் குழந்தைகள் உட்பட ஏழு குழந்தைகள் இருப்பதாகவும், மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில் வருமானம் போதாமையில் திருடியதாகவும் கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com