சேலம் : கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் மீது கள்ளக்காதலன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு
Published on

சேலம் குகை பகுதியில் வசித்து வரும் காயத்ரி என்பவர் தனது கணவரை பிரிந்து, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனிவாசனுடனான பழக்கத்தை காயத்ரி நிறுத்தி கொண்டதால் தொடர்ந்து பழகுமாறு காயத்ரியை சீனிவாசன் வற்புறுத்தியுள்ளார். இதற்கு காயத்ரி மறுக்கவே ஆத்திரமடைந்த சீனிவாசன், காயத்ரியின் முகத்தில் ஆசிட் வீசி உள்ளார்.

பலத்த காயமடைந்த காயத்ரி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் குறித்து செவ்வாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற சீனிவாசனை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com