

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது
பிரிட்டனில் உள்ள உலக தமிழ் நிறுவனம் சார்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 4வது சர்வதேச மருத்துவ சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும் விழா, பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மகன் மருத்துவர் இளஞ்செழியன் பெற்றுக்கொண்டார்.