வாட்டர் மெலன் ஸ்டாரால் ஜூஸ்-ஆன `அக்யூஸ்ட்' டீம் - பிரஸ்மீட்டில் பரபரப்பு
அக்யூஸ்ட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை படத்தில் ஏன் நடிக்க வைத்தீர்கள் என பத்திரிக்கையாளர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாகவுள்ள 'அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகன் உதயாவிடம் பத்திரிக்கையாளர்கள், வாட்டர் மெலன் ஸ்டார் என தன்னை அழைத்துக் கொண்டிருக்கும் திவாகர் பத்திரிகையாளர்களை இழிவு படுத்துவதாக கூறி, திரைத்துறையினர் அவரை படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story
