

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விடுதி உரிமையாளர்கள் மற்றும் மீனவர் கிராம தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார், புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் மற்றும் அதனை சுற்றி கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அரசு உரிமம் இன்றி நடத்தப்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.