ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கும் போது நடக்கும் விபரீதங்கள் - எச்சரிக்கை
சென்னை விமான நிலையப் பகுதியில் லேசர் விளக்குகள் மற்றும் உயரப் பறக்கும் பலூன்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையம் எச்சரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த பயணிகள் விமானத்தின் மீது லேசர் அடிக்கப்பட்டது. இந்நிலையில், விமான நிலைய கண்காணிப்பு வளையப் பகுதிகளுக்குள் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
