Road Accident | ManaMadurai | வடமதுரையில் சாலையோரம் நின்ற கார் மீது வேன் மோதி விபத்து

வடமதுரையில் சாலையோரம் நின்ற கார் மீது வேன் மோதி விபத்து

வடமதுரையில் சாலையோரம் நின்ற கார் மீது வேன் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மோர்பட்டி பகுதியில் இயற்கை உபாதை கழிக்க கார் ஓட்டுநர் கீழே இறங்கியிருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் காரின் பின்பகுதியில் மோதி, கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி வேன் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து, ஓட்டுநர் கார்த்திக் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போராடி அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com