திருச்சி அருகே கார் மீது வேன் மோதி விபத்து | சம்பவ இடத்திலேயே உயிரிழந்த SI
கார் மீது வேன் மோதி விபத்து - சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
திருச்சி திருவெறும்பூர் அருகே காரும், வேனும் மோதி கொண்ட விபத்தில் திருச்சி போக்குவரத்து பிரிவு சிறப்பு SI பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி k.k. நகர், LIC காலனியை சேர்ந்த திருக்குமரன் என்பவர், திருச்சி நீதிமன்ற போக்குவரத்து காவலராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அவர் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, மன்னார்குடி நோக்கி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ரிங் ரோடு வழியாக வந்த வேன் ஒன்று இவரது கார் மீது மோதியது. இந்த விபத்தில், திருக்குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது வேனில் இருந்த சிலரும் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நவல்பட்டு போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
