

விபத்து இழப்பீடு தொகையை பெற்றுத் தராமல் வழக்கறிஞர் காலம் தாழ்த்தி வருவதாக கூறி, சேலம் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கால்களை இழந்தார். இது குறித்து கதிர்வேல் என்ற வழக்கறிஞர் கடந்த 5 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்துள்ளார். ஆனால் வழக்கறிஞர் இன்னும் நிவாரணத்தை பெற்று தரவில்லை என கூறி, சதீஷ், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.