சோதனைச் சாவடியில் விபத்து - 2 காவலர்கள் படுகாயம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வாகனம் மோதி காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... பொன்பாடி என்ற இடத்தில் சோதனைச் சாவடியில் விக்னேஷ் என்ற 2ம் நிலை காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தூக்க கலக்கத்தில் டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த தாசிக் என்பவர், வேகமாக வண்டியை செலுத்தி மற்றொரு வாகனத்துடன் மோதினார். இதனால் அந்த வாகனம் ஒரு சொகுசு காரில் மோதியதுடன், காவலர் விக்னேஷ் மீது மோதி, அவர் இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் படுகாயமடைந்தார். அதேபோல் மற்றொரு வாகன தணிக்கையிலிருந்த லட்சுமணன் என்ற காவலரும் வாகனம் மோதி காயமடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தாசிக்கையை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
