

மதுரை தோப்பூரில் அமைக்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக் தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய மாணிக் தாக்கூர் கடந்த 2015 பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதையும் மக்களவை தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அதற்கு அடிக்கல் நாட்டியதையும் சுட்டிக்காட்டினார். அடிக்கல் நாட்டி 10 மாதங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் இதுவரை எந்த விதமான பணிகளும் அங்கு நடைபெறவில்லை என மாணிக் தாக்கூர் கேட்டுக் கொண்டார்.