A.C. Shanmugam | டெல்டா மாவட்டத்தில் வ.உ.சி. சிலை திறக்கப்படும் - ஏ.சி.சண்முகம் உறுதி

x

சென்னையில் பாழடைந்து கிடக்கும் வ.உ.சி வாழ்ந்த வீட்டை நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சி.ஆர்.சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். வ.உ.சி சிலையை திறந்து வைத்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அடுத்ததாக டெல்டா மாவட்டத்தில் வ.உ.சி சிலை திறக்கப்படும் என்று தெரிவித்தார்... மேலும், தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வ.உ.சி பெயர் வைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், வ.உ.சிக்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என்றும், பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்