உத்தபுரம் கிராமத்தை சேர்ந்த, ராமன் - ராமுத்தாய் தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானதால், நான்காவதாக பெண் குழந்தை பிறக்கும் என எண்ணி கருவை கலைக்க ராமுத்தாய் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செவிலியர் லட்சுமி உதவியுடன் வீட்டிலேயே ராமுத்தாய்க்கு கருக்கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி போலீசார் தனியார் மருத்துவமனை செவிலியர் லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.