உடம்பில் மிளகாய் பொடியை கரைத்து ஊற்றி அபிஷேகம்.. பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அறம்வளர்த்த நாயகி - அன்பகநாயக ஈஸ்வரர்
கோயில் வளாகத்தில் உள்ள ஆறுமுக பெருமானுக்கு 59-ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பால் காவடி, பூந்தேர் மற்றும் வேல் பூஜை ஆகியவை நடைபெற்றதை தொடர்ந்து , முக்கிய நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பக்தர்கள் மிளகாய் பொடி அபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து தீமிதித்து ரதமும், காவடிகளும் மாட வீதியில் உலா வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
