முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள தேசிய நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மணிமண்டபத்தில் துஆ ஓதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலாம் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் கலாம் தேசிய நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்