செப். 28 -ல் ஆஜராக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாருக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செப். 28 -ல் ஆஜராக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன்
Published on

டாக்டர் சிவக்குமாரை பொறுத்தவரையில் ஏற்கனவே 4 முறை ஆஜராகி விளக்கமளித்துள்ள நிலையில், 5- வது முறையாக வருகிற 28ஆம் தேதி ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம், 2014 முதல் 2016 வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர்களின் விபரம், அவருக்கு டாக்டர்கள் வழங்கிய மருந்துகள் விபரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர் சிவக்குமார் ஆஜரான போது ஜெயலலிதா எடுத்துக்கொண்ட உணவுப்பட்டியலும், மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருந்த ஆடியோ பதிவுகளையும் ஆணையத்தில் ஒப்படைத்திருந்தார். இதனிடையே, வருகிற 28 ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகுபவர்களின் பட்டியலில், அப்பல்லோ சட்டப்பிரிவு செயலாளர் மோகன்குமார், அப்பல்லோ டாக்டர்கள் மீரா, தவபழனி உள்ளிட்டோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com