Aaromaley |"அப்பாவுக்கு எவ்ளோ சந்தோசம் இருக்குமோ அவ்ளோ சந்தோசமா இருக்கு.."-உருகி பேசிய நடிகர் தியாகு
என் மகன் இயக்குநராகி ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்கு ஒரு தந்தையாக நான் பெருமைப்படுகிறேன் என்று ஆரொமலே பட இயக்குநரின் தந்தையும், நடிகருமான தியாகு தெரிவித்துள்ளார். சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், சிவாத்மிகா, ஹர்ஷத் கான், உள்ளிட்டோர் நடித்துள்ள ஆரோமலே திரைப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இதன் சிறப்பு காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை நடிகர் கிஷன்தாஸ், அவரது தாயும், சின்னத்திரை நடிகையுமான பிரிந்தா தாஸ், நடிகர் ஹர்ஷத் கான் ஆகியோர் படம் குறித்து பேசினர். முன்னதாக நடிகர்கள், ரமேஷ் கண்ணா, அருண் விஜய், விஜயகுமார், சண்முக பாண்டியன், நடிகை ரெஜினா, உள்ளிட்டோர் படத்தை பார்த்து பாராட்டினர்.
Next Story
