அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் | அலைகடலென குவிந்த மக்கள்
அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி வழிபாடு செய்தனர்.
Next Story
