செக்போஸ்டில் உள்துறை செயலாளர் திடீர் ஆய்வு.. உடனே பறந்த உத்தரவு - தமிழக எல்லையில் பரபரப்பு

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடியில், கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். பள்ளிப்பட்டு அருகேயுள்ள சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சோதனை சாவடி குடோன் போன்று உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்களை சரியான முறையில் இயக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்த அவர், கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com