கழுத்தளவு ஓடும் வெள்ளம்.. சொல்ல சொல்ல கேட்காமல் நாயுடு செய்த செயலால் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம்​ விஜயவாடாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டார். விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும், அதனை மீறி படகில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குடிநீர், உணவு வழங்கி, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீட்புப் பணிகள் முடிவடையும் வரை அங்கேயே முகாமிட்டு செயல்படப்போவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com