பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் விலங்குகளை வேட்டையாடும் கும்பல் மற்றும், மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.