தமிழ்நாடு முழுக்க ஆடிப்பூர திருவிழா கோலாகலம்
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் ஆடிப்பூர தேரோட்டம்
தென்கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் ஆடிப்பூர தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த ஜூலை 19-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், தினசரி மட்டுவார் குழலம்மை அம்பாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் ஞாயிறு இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதில், மட்டுவார் குழலம்மை தாயார் அலங்கரிக்கப்பட்ட சிறு தேரில் எழுந்தருளி மகா தீபாராதனைக்குப்பிறகு, மங்களவாத்தியங்கள் முழங்கிட மலைக்கோட்டை மாடவீதிகளில் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Next Story
