Parithabangal | "ஆடி மாச பாவங்கள்" - சர்ச்சையை கிளப்பிய காட்சி.. அறிக்கை வெளியிட்ட பரிதாபங்கள் டீம்

"ஆடி மாச பாவங்கள்" - சர்ச்சையை கிளப்பிய காட்சி.. அறிக்கை வெளியிட்ட பரிதாபங்கள் டீம்

Parithabangal | "ஆடி மாச பாவங்கள்" - சர்ச்சையை கிளப்பிய காட்சி.. அறிக்கை வெளியிட்ட பரிதாபங்கள் டீம் பிரபல யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' வெளியிட்ட "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சிலரின் மனதைப் புண்படுத்தியதாக எழுந்துள்ள விமர்சனத்தைத் தொடர்ந்து, அந்த வீடியோவிலிருந்து அக்காட்சி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில், அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை என்றும், இருப்பினும் சிலரின் மனம் புண்பட்டதை உணர்ந்து உடனடியாக அந்தப் பகுதி நீக்கப்பட்டுள்ளதாகவும் பரிதாபங்கள் குழு தெரிவித்துள்ளது. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com