Aadi Masam | பிறக்கப்போகும் ஆடி மாதம்..இப்போதே தயாரான மக்கள்
ஆடி பிறப்பை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற வாராந்திர கால்நடை சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆடு, கோழி, வாத்து உள்ளிட்ட கால்நடைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஆடி மாதத்தில் தொடங்கும் செயல்கள் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையால், இந்த நாளை கிராமப்புற மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். சந்தையில் ஒரு ஜோடி வாத்துகள் ரூ.2,500 வரையும், சண்டைச் சேவல் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையும், 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8,500 முதல் ரூ.10,000 வரையும் விற்பனையாகின. ஆடி பிறப்பையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனையாகி, சந்தை விறுவிறுப்பாக காணப்பட்டது.
