ஆடி கிருத்திகை - திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

x

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருச்செந்தூரில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு, குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசனம் செய்தனர். இதனிடையே திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில் சாலையில் தொடர்ந்து வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்