ஆடி முதல் வெள்ளிக் கிழமை - பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக் கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா காரணமாக 2 மாத காலத்திற்கும் மேலாக கோவில்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அம்மன் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இருப்பினும், தொற்றுப் பரவல் காரணமாக சாமிக்கு அர்ச்சனை செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com