ஆடி 18, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய விஷேச நாட்கள் அடுத்தடுத்து வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி கிருத்திகையான இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.