"யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் அவசியம்"

x

இனி வரும் காலங்களில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தேர்வுகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், நிலைக்குழுக் கூட்டத்தில் அரசுப் பணிக்கான தேர்வுகளின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் விவாதிக்க உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்