விபச்சார புரோக்கர் வீட்டில் இளம் பெண் சடலம்!! வெளியான அதிர்ச்சி பின்னணி

x

காரைக்கால் பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருபவர் வீட்டில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் ராஜாத்தி நகரில் விபச்சார புரோக்கர் தயாளன் கடந்த சில நாட்களாக வினோதினி என்ற ​திருமணமான இளம் பெண்ணுடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் வினோதினி வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் வந்த போலீஸாரிடம் வினோதினி தூங்குவதாக கூறிவிட்டு தயாளன் தப்பியுள்ளார். உள்ளே சென்ற போலீஸார் தூக்கில் தொங்கிய நிலையில் வினோதினி உடலை மீட்டனர். மேலும் 2 மணி நேர தேடுதல் வேட்டையில் அருகில் உள்ள அடுக்கு மாடி கட்டடத்தில் பதுங்கி இருந்த தயாளனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்