லாரி மோதி கண்முன்னே பலியான இளம்பெண் - அய்யோ சார்.. சொல்லி சொல்லி அழுத இளைஞர்

x

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞருடன் அபிராமி என்ற பெண், பைக்கில் ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். சென்னை திரும்பியபோது தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் இவர்கள் வந்த பைக் மீது லாரி மோதியது. விபத்தில் படுகாயம் அடைந்த அபிராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயம் அடைந்த சுந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்