மஞ்சுவிரட்டை பார்க்க சென்ற இளைஞர் மாடு முட்டியதில் பலி
சிவகங்கை மாவட்டம், மு.சூரக்குடியில் நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மு.சூரக்குடியில் உள்ள செகுட்டையனார் கோவில் பொங்கல் விழாவையொட்டி இந்த ஆண்டின் முதல் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில்100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அப்போது காளை முட்டியதில் 25 பேர் காயமடைந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த 19 வயது சுஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விடுமுறைக்காக மஞ்சுவிரட்டை பார்வையிடுவதற்காக வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
