செல்போன் பேசியபடி தண்டவாளத்தில் சென்ற வாலிபர் ரயில் மோதி பலி

x

பேராவூரணியில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரயில் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பிரபாகரன், தஞ்சை பேராவூரணியில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இரவு வேலை முடிந்து திரும்பிய அவர் செங்கோட்டையிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டடு சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்