காதலியை மிரட்ட தூக்கு போட முயன்ற இளைஞர் துணியில் கழுத்து இறுகி பலி
வாட்ஸ் அப் வீடியோ காலில் காதலியை விளையாட்டாக மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கிய வாலிபரின் கழுத்தில் துணி இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை ஜெய்சங்கரன் என்ற இளைஞர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜெய்சங்கர் தனது காதலியிடம் வழக்கம்போல் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலியை மிரட்டுவதற்காக போர்வையால் தூக்கிட முயன்ற ஜெய்சங்கர், எதிர்பாராத விதமாக கழுத்தில் போர்வை இறுகி உயிரிழந்தார்.
Next Story
