ஆசை ஆசையாக அமேசானில் ஆர்டர் செய்த இளைஞருக்கு பேரதிர்ச்சி

x

ஆசை ஆசையாக அமேசான் தளத்தில் ட்ரோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு, வாட்டர் பாட்டில் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த குகன் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் அமேசான் ஆஃபரில் குறைந்த விலையில் 800 ரூபாய்க்கு வானில் பறக்கும் ட்ரோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஜீபே மூலம் பணத்தையும் செலுத்தி உள்ளார். ஆனால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த குகன், அதில் பத்து ரூபாய் மதிப்புள்ள சிறிய வாட்டர் பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இது குறித்து ஆதாரத்துடன் அமேசான் தளத்தில் குகன் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்