Pudukottai | போதையில் சில்மிஷம் செய்த இளைஞர் - தர்ம அடி கொடுத்த இளம்பெண்..

போதையில் சில்மிஷம் செய்த இளைஞர் - தர்ம அடி கொடுத்த இளம்பெண்..

#Pudukottai #Attack #Drunk #TNPolice #ThanthiTV Pudukottai | போதையில் சில்மிஷம் செய்த இளைஞர் - தர்ம அடி கொடுத்த இளம்பெண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை தாக்கி போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் ஆட்டோவில் ஏறியபோது, அங்கு வந்த போதை இளைஞர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட, அங்கிருந்த பொதுமக்கள் இளைஞரைப் பிடித்து தாக்கியுள்ளனர். அப்போதும் இளைஞர் தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த இளம்பெண், அவரை சரமாரியாகத் தாக்கினார். தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் அஜித் என்பது தெரியவந்தது.

X