தியேட்டரில் பெண்ணிடம் அசிங்கம் செய்த இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை, திருவல்லிக்கேணியில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அவரது உறவினருடன் அண்ணாசாலையில் உள்ள திரையரங்கிற்கு சென்ற நிலையில், அவரை பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக் கேட்ட மாணவியின் உறவினரை, தகாத வார்த்தையில் பேசிவிட்டு அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட திருவல்லிக்கேணி போலீசார், அண்ணாசாலை பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
